Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மகர இராசிக்கு… “எதைப்பற்றியும் கவலை வேண்டாம்”.. அனைத்திலும் நல்லதே நடக்கும்..!!

மகரம் ராசி அன்பர்களே..!! இன்று குடும்ப உறுப்பினர்கள் அதிக அன்பு பாசத்துடன் உங்களை நடந்து கொள்வார்கள். தொழில் வியாபாரத்திலிருந்த போட்டிகள் விலகிச்செல்லும். பண பரிவர்த்தனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுப செலவுகள் செய்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்திற்காக புதிய முயற்சிகளை நீங்கள் செய்யக் கூடும். அந்த முயற்சி சாதகமான பலனை உங்களுக்கு கொடுக்கும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை மட்டும் இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம்.

உங்களுக்கு அனைத்து விதத்திலும் நல்லதே நடக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் செல்லக் கூடும். அந்த பயணங்கள் வெற்றிகரமாகவே நடக்கும். இன்று பணவரவு பையை வந்து நிரப்பும். அதுமட்டுமில்லாமல் சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்களுக்கும் நல்ல முன்னேற்றமான சூழல் அமையும்.

கல்வியில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். சக மாணவரின் ஒத்துழைப்பும் ஆசிரியரின் ஒத்துழைப்பும் இன்று கிடைக்கும். இன்று முக்கியமான பணியை  நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |