மகரம் ராசி அன்பர்களே..!! இன்று புகழ்ச்சியை மனம் விரும்பும். செயல் நிறைவதற்கு சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் சிறிய குளறுபடி வந்து சரியாகும். கொஞ்சம் பணக்கடன் பெறக்கூடும். ஒவ்வாத உணவுகளை மட்டும் உண்ண வேண்டாம். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களது ஆலோசனை கேட்டு நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் வருத்தங்கள் நீங்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு திருப்தி தருவதாக இருக்கும்.
சோதனைகளை வெற்றியாக இன்று மாற்றிக் கொள்வீர்கள். உங்களுடைய செயல்பாடுகள் மற்றவர்களை கவரும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பணப்பரிவர்த்தனையில் ரொம்ப கவனமாக செயல்பட வேண்டும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். அது போலவே வெளியூரிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
கூடுமானவரை ஆசிரியர்களின் சொற்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதுபோலவே தினசரி காக்கைக்கு அன்னம் இடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி காரியத்தில் வெற்றி ஏற்படும். தயவு செய்து இதனை நீங்கள் செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்