மகரம் ராசி அன்பர்களே..!! இன்று காரிய வெற்றி ஏற்பட இறைவனை மனதார நினைத்து வணங்குங்கள். உடன் பிறப்புகளால் உற்சாகம் ஏற்படும். உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசியவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். அது மட்டுமில்லாமல் அவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்லக் கூடும். இன்று கை, கால் வலி, உடல் சோர்வு போன்றவை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்பட்டு சரியாகும். கௌரவம் பாதிக்கும் படியான சூழ்நிலை கொஞ்சம் வரக்கூடும். உங்கள் பேச்சில் மட்டும் இன்று நிதானம் இருந்தால் அந்த பிரச்சினைகளிலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் நண்பர் உடன் அனுசரித்து செல்லுங்கள்.
கூட்டு தொழில் புரிபவர்களுக்கு நல்ல லாபம் இன்று கிடைக்கும். கலைத் துறையை சார்ந்தவர்களுக்கு எல்லா நன்மைகளையும் தடையின்றி அந்த இறைவன் கொடுப்பார். ரொம்ப நாட்களாக மிகவும் கஷ்டப்பட்டு வந்து கொண்டிருந்த நோய் உங்களுக்கு இன்று சரியாகும்.கை கால் அசதி மட்டும் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மகர ராசிக்காரர்கள் எப்போதுமே மனதைநீங்கள் தைரியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள். அதனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதை சாமர்த்தியமாகவும் நீங்கள் சரிசெய்வீர்கள். வரக்கூடிய உபரி வருவாயால் கடன்கள் அனைத்துமே அடைபடும்.
இன்று கடன்கள் அடைபட்டு மனமகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நிலை பாடற்ற பிரச்சினைகளிலிருந்து நீங்கள் தப்பித்துக் கொள்வீர்கள். அது மட்டும் இல்லை இன்று பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். வீண் வாக்குவாதங்கள் யாரிடமும் செய்ய வேண்டாம். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் நிகழும். தயவுசெய்து இதை செய்து பாருங்கள். உங்களுக்கு நல்ல வெற்றியை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்