Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஒரு டைவ்… பாய்ந்து பிடித்து… மைதானத்துக்குள் பந்தை வீசிய பூரான்… வைரலாகும் சூப்பர் வீடியோ..!!

பஞ்சாப் அணியின் வீரர் நிகோலஸ் பூரான் டைவ் அடித்து சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் ஒன்பதாவது லீக் போட்டி நேற்று சார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்தின.. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரராக களம் இறங்கி அதிரடியாக ஆடினர்.. இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 223 ரன்களை குவித்தது..

அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 50 பந்துகளில் 106 ரன்களையும், கேஎல் ராகுல் 54 பந்துகளில் 69 ரன்களும் எடுத்தனர்.. மேலும் நிக்கோலஸ் பூரன் 25 ரன்கள் எடுத்தார்..  பின்னர் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்மித் மற்றும் ஜோஸ் பட்லர் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.. இதில் சுமித் அருமையாக ஆடினார்.. ஆனால் காட்ரெல் பந்துவீச்சில் பட்லர் 4 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்..

இதனையடுத்து கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் கேப்டன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் கைகோர்த்தனர்.. இருவரும் பஞ்சாப் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.. தங்களுக்கும் அதிரடியாக ஆட தெரியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்களது அடி இருந்தது.. பவர் பிளேயில் அதிரடியாக ஆடினார்கள்.. அதன்பின் சாம்சன் வழக்கம்போல சிக்ஸர்களை பறக்கவிட்டார்.. சிறப்பாக ஆடிய கேப்டன் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்..

இதனையடுத்து 17 வது ஓவரில் சாம்சன் 42 பந்துகளில் 85 ரன்களில் ஆட்டமிழந்தார்..  இதனால் ஆட்டத்தில் பரபரப்பு நிறைந்தது.. கடைசியில் ராகுல் திவேதியா காட்ரெல் வீசிய 18-வது ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்களை பறக்கவிட்டு பஞ்சாப் வீரர்களை பதறவிட்டார்.. தொடக்கத்தில் ஆமை வேகத்தில் ஆடிக்கொண்டு இருந்த அவர் பின்னர் சூறாவளியாக மாறியது அந்த அணியினருக்கு வெற்றியை பரிசாக கொடுத்தது.. திவேதியா 31 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.. இதனால் ராஜஸ்தான் அணி 19.3 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சேசிங் செய்த அணி என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணிகளின் பேட்டியின் போது, அந்த அணியின் வீரர் சஞ்சு சாம்சன் முருகன் அஸ்வின் வீசிய 8ஆவது ஓவரில் மூன்றாவது பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்தார். அப்போது எல்லைக்கோடு அருகே இருந்த பஞ்சாப் வீரர் நிகோலஸ் பூரான் எல்லைக்கோட்டை தாண்டி டைவ் அடித்து கேட்ச் பிடித்து மைதானத்திற்குள் பந்தை தூக்கி வீசினார்.. இதனால் 4 ரன்களை சேவ் செய்துள்ளார் பூரான்.. அப்போது எழுந்து நின்று கைதட்டினார் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் ஜான்டி ரோட்ஸ்.. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்..

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், விமர்சகர்கள், ரசிகர்கள் உட்பட பலரும் இப்படி ஒரு பீல்டிங்கை பார்த்ததே கிடையாது என்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். நிகோலஸ் பூரான் பெரும்பாலும் பீல்டிங் நிற்காமல் விக்கெட் கீப்பிங் செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |