நிவர் புயல் காரணமாக சென்னையில் விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
நிவர் புயல் சென்னை நெருங்கிக் கொண்டிருப்பதால் சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருச்சி, தூத்துக்குடி, கண்ணூர், விஜயவாடா மற்றும் பெங்களூர் செல்லக்கூடிய 12 விமானங்களும், நகரங்களுக்கு வரக்கூடிய 12 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மொத்தத்தில் முதற்கட்டமாக 24 விமானங்கள் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காலநிலைக்கு ஏற்ப கூடுதலாக விமானங்கள் ரத்து செய்யப்படலாம், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் , விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பயணிகள் அனைவரும் விமான நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். என்னென்ன விமானங்கள் ரத்து செய்யப்படும் என்று பின்னர் அறிவிப்புகள் படிப்படியாக அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.