‘டாக்டர்’ திரைப்படத்தை ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இப்படம் கடந்த மார்ச் 26 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அப்போது தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலூக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததால் இப்படத்தின் ரிலிஸை ரம்ஜான் பண்டிகைக்கு தள்ளிவைத்தனர். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இப்போதும் டாக்டர் படத்தினை திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் டாக்டர் திரைப்படத்தை ஓடிடில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதன்படி பிரபல ஓடிடி நிறுவனம் டாக்டர் படத்தை பெரிய தொகையைக்கு வாங்க சம்மதித்துள்ளது. ஆனால் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை மற்றொரு நிறுவனம் முன்னதாகவே வாங்கிவிட்டது.
இதனால் சாட்டிலைட் உரிமையை சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் இருந்து வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் பல மாதங்களாக ரிலீசாகாமல் இருக்கும் டாக்டர் படத்தை ஓடிடியிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் படக்குழுவினர் தவித்து வருகின்றனர்.