Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை….. 11 கிலோ கஞ்சா பறிமுதல்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 11 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாகி இருப்பதாக காவல்துறையினருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின்படி தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் மேற்பார்வையில் தனிப்படை காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் பைக்கில் நின்றுக்கொண்டிருந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில்  பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் அவர் மதுரை மாவட்டத்தில் உள்ள பாசிங்காபுரத்தில் வசிக்கும் மணிமாறன் என்பது தெரியவந்துள்ளது. அதோடு அவர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் மணிமாறன் இதனை தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் கஞ்சா மற்றும் பைக்கினை பறிமுதல் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் சட்டவிரோதமான கஞ்சாக்கடத்தலில் 11 கிலோவினை கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மணிமாறனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |