கடகம் ராசி அன்பர்களே..!! இன்று முக்கிய பணி ஒன்றை மறந்து விடுவீர்கள். இன்று மறதி அதிகமாகத்தான் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். குடும்ப உறுப்பினர் நினைவுபடுத்தி உங்களுக்கு சில விஷயங்களை உதவக்கூடும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பண வரவை சிக்கன முறையில் பயன்படுத்துவீர்கள். மாணவர்களின் பாதுகாப்பில் கவனம் இருக்கட்டும்.
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும் வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் இருக்கட்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும். வேலைப்பழு கொஞ்சம் அதிகமாகதான் இருக்கும். அதே போல செய்கின்ற காரியங்களில் தாமதமான போக்கு காணப்படும். பாராட்டுகள் பெறுவது இன்று கடினமாக இருக்கும்.. மனதில் அவ்வப்போது சிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும்.
இன்று காரியங்களை பொறுமையுடனும் நிதானத்துடனும் செய்யுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நிறமாக உள்ளது. அது மட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்