இந்தியாவில் புற்றுநோயினால் பெண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும்பாலும் பெண்கள் மார்பக புற்றுநோயால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோயும் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த புற்றுநோய்களினால் இறப்பும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இந்த ஆண்டு 13.9 லட்சமாக அதிகரித்துள்ளது.
மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் 15.7 லட்சமாக உயரும் என்று ஐ.சி.எம்.ஆர் மற்றும் தேசிய நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சி மையம் (பெங்களூரு) இணைந்து நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஆண்களை விட பெண்களே புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று கூறபட்டுள்ளது.