கொரோனா வருதோ இல்லையோ கேன்சர் வருவது உறுதி என பிரபல டாக்டர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொரோனாவின் அச்சம் காரணமாக நாடு முழுவதும் பொதுமக்கள் 144 தடை உத்தரவு என்றால் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த ஊரடங்கு உத்தரவால் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க பொதுமக்கள் வெளியே வருகின்றன. அவை மட்டுமே வெளி கடைகளிலும் தற்போதைய சூழ்நிலைக்கு கிடைத்து வருகின்றன. மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில் சட்ட விரோதமாக குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களும் ஆங்காங்கே மது விற்பனையும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக போதைக்கு அடிமையான சிலர் சாதாரண நாட்களில் பயன்படுத்துவதை விட, வீட்டிற்குள்ளே தற்போது அதிகமாக இருப்பதால் போதை பொருள்களை அதிகமாக பயன்படுத்தி வருவதாக சிதம்பரம் பகுதியில் வசித்து வரும் பிரபல மருத்துவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கொரோனா வருகிறதோ ? இல்லையோ? கேன்சர் வருவது உறுதி என்று தெரிவித்த அவர், இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.