Categories
மாநில செய்திகள்

“சிறுபான்மை மாணவர்களுக்கு”….. கல்வி உதவித்தொகை ரத்து?…. ஒன்றிய அரசின் நடவடிக்கையால் கொந்தளித்த மாசிக….!!!!!

மத்திய அரசானது அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கு பல்வேறு விதமான கல்வி உதவி தொகைகளை வழங்கி வருகிறது. அதன் பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மை மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வி உதவி தொகையில் தற்போது மத்திய அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பால கிருஷ்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2006-ம் ஆண்டு இறுதி இடதுசாரிகள் ஆதரவுடன் அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது தான் சிறுபான்மை கல்வி உதவி திட்டம். இந்த திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களும் பயனடைந்து வந்த நிலையில், தற்போது 9 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் தான் கல்வி உதவி தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை நிறுத்திய மத்திய அரசு அடுத்தது‌ படிப்படியாக மற்ற வகுப்புகளுக்கும் கல்வி உதவி தொகையை நிறுத்தி விடும்.

சிறுபான்மை மக்களின் மீது மோடி அரசானது தொடர்ந்து வெறுப்புணர்வை காட்டி தாக்குதலை நடத்தி வருகிறது. தற்போது மோடி அரசு சிறுபான்மை மாணவர்களின் மீது கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டிக்கிறோம். மேலும் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கல்வி உதவி தொகையை பெறுவதற்காக விண்ணப்பித்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மீண்டும் கல்வி உதவி தொகையை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |