தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, பாம்பன் ரயில் பாலத்தில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இநனால் சென்னையில் இருந்து டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் புறப்படும் ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் மற்றும் டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் போன்றவைகள் ராமேஸ்வரம்- மண்டபம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
இதேப்போன்று டிசம்பர் 24, 25 தேதிகளில் திருச்சி- ராமேஸ்வரம்-திருச்சி, மதுரை-ராமேஸ்வரம்-மதுரை, ராமநாதபுரம்-ராமேஸ்வரம் ஆகிய விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. இதேபோன்று டிசம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் ராமேஸ்வரம் வழியாக செல்லும் வாராந்திர விரைவு ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. அதன் பிறகு ராமேஸ்வரம்- ஹூப்ளி-ராமேஸ்வரம் விரைவு ரயில் மட்டும் ராமநாதபுரம்-ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.