Categories
மாநில செய்திகள்

பொதுத்தேர்வு ரத்து… “நாங்களும் இருக்கோம் பார்த்து பண்ணுங்க” ட்விட்டரில் வைரலாகும் கல்லூரி மாணவர்களின் கதறல்…!!

பொதுத்தேர்வை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து கல்லூரி தேர்வையும் ரத்து செய்ய மாணவர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது

கொரோனா தொற்று பரவ தொடங்கியதை தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்ததால் எப்போது பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்பதை உறுதி செய்ய முடியாமல் எட்டாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. ஆனால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவடைந்த நிலையில் பத்தாம் வகுப்புக்கும் பதினொன்றாம் வகுப்புக்கும் தேர்வு நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

ஊரடங்கும் நீட்டிக்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு பின்னர் தொற்றின் வீரியம் அதிகமானதாலும்  தொடர்ந்து பலதரப்பட்டஎதிர்ப்புகளாலும் தேர்வு ஜூன் மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு அவர்கள் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்த நிலையில் தற்போது மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பத்தாம் வகுப்பு பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி கூறியுள்ளார்.

இந்த செய்தி பொதுத்தேர்வு எழுத தயாராக இருந்த மாணவ மாணவிகளின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், கல்லூரி செமஸ்டர் தேர்வு எழுத இருக்கும்  மாணவ மாணவிகளின் மனதில் ஏமாற்றத்தை கொடுக்கும் விதமாக அமைந்தது. இதனையடுத்து தங்களுக்கும் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென பல விதங்களில் அவர்களது கோரிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பங்காக ட்விட்டரில் ஏராளமான பதிவுகளை #CancelTNSemesterExams என்ற ஹேஷ்டேக் மூலம் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர். பள்ளி மாணவ மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டது போல் கல்லூரி மாணவ மாணவிகளின் கதறலையும் அரசு ஏற்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

Categories

Tech |