கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 18 ஆண்டுகளுக்கு முன் கறுப்பினத்தவரை கேலி செய்யும் வகையில் வேடமணிந்ததற்கு தற்போது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது 29-வது வயதில் வெஸ்ட் பாய்ன்ட் கிரே அகாடமி என்ற தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தபோது, அரேபியன் நைட்ஸ் என்ற இரவு விருந்து நிகழ்ச்சியின் போது ட்ரூடோ கறுப்பினத்தவரை கேலி செய்வது போல வேடமிட்டிருந்தார். இந்த தோற்றமானது அந்த பள்ளியின் ஆண்டு புத்தகத்தில் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தை அமெரிக்காவின் டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டது. ட்ருடோ 2-வது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று தேர்தலுக்கு தயாராகி வருகின்ற நிலையில், கறுப்பினத்தவரை கிண்டல் செய்வது போன்ற 18 ஆண்டுகளு -க்கு முன் ஜஸ்டின் ட்ரூடோ எடுத்த அந்த புகைப்படம் அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டது. இதையடுத்து அமைதியாக இருந்தால் வேலைக்கே ஆகாது என்று எண்ணிய ஜஸ்டின் ட்ரூடோ பிரச்சாரத்தின் போது தனது விமானத்தில் இருந்த படியே செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அந்த புகைப்படத்தில் இருப்பது நான் தான் என ஒப்புக் உண்மையை கொண்டார். நான் இளமைப் பருவத்தில் தவறு செய்ததற்கு தற்போது மிகவும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மன்னிக்கவும். இருப்பினும் தான் அப்படி செய்திருக்கக் கூடாது என்றும் விளக்கமளித்துள்ளார். ட்ரூடோ விளக்கம் அளித்த போதிலும், பிறப்பினால் பெற்ற நிறத்தின் அடிப்படையில் ஒருவரைக் இப்படி கேலி செய்யும் இனப்பாகுபாடு நல்லதல்ல என புதிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜக்மீத் சிங், ட்ரூடோவை விமர்சித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.