Categories
உலக செய்திகள்

மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பும் கனடா பிரதமர்…. இதற்கு தான் இந்த முடிவு….!!

வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு பாடத்தில் சந்தேகம் ஏற்பட்டால் அதனை தீர்த்து வைக்க நான் தயார் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் கட்டுப்பாடுகள் காரணமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் சூழல் உருவாகியுள்ளது. தற்போது இருக்கும் பாடத்திட்டங்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லிக் கொடுப்பது கடினமானதாகவே இருந்து வருகின்றது.

இந்நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது ட்விட்டர் பக்கத்தில், “வணக்கம் பெற்றோர்களே, ஒருவேளை உங்கள் குழந்தைகளின் வீட்டுப் பாட கேள்விகளில் நீங்கள் சிக்கிக் கொண்டு இருந்தால் குழந்தைகளின் சந்தேகத்தை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். ஒரு ஆசிரியராக நான் உதவ விரும்புகின்றேன்.

குழந்தைகளின் படத்திலிருக்கும் கடினமான சந்தேகங்களை #CanadaHomeworkHelp பயன்படுத்தி தெரியப்படுத்துங்கள். என்னால் என்ன செய்ய இயலும் என்று நான் பார்க்கிறேன்” என பதிவிட்டுள்ளார். பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ தேர்ந்தெடுப்பதற்கு முன்னர் அவர் பல்வேறு பணிகளை செய்துள்ளார். அதில் முக்கியமானது ஆசிரியர் பணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |