நியூசிலாந்து, பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் தங்கள் குடிமக்கள் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்குமாறு எச்சரித்திருக்கின்றன.
கனடா அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இலங்கையில் சமீபத்தில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உள்ளூர் அதிகாரிகள் வாரன்ட் இன்றி பொது மக்களை கைது செய்ய கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார்கள். இதனால், அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் ஆரம்பித்த பேரணி அமைதியாக சென்ற நிலையில், அந்நாட்டின் ராணுவம் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்க முயன்றதால் வன்முறை வெடித்திருக்கிறது. மேலும் பேரணிகள் அமைதியாக சென்றால் கூட அதில் வன்முறை ஏற்படலாம். எனவே, இலங்கையில் இருக்கும் தங்கள் மக்கள் பாதுகாப்புடனும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது.