Categories
உலக செய்திகள்

‘மாஸ்க்’ அணிவதால் தொற்று பரவாமல் தடுக்க முடியுமா?…. லண்டன் பல்கலைக்கழகம் சொன்ன ஷாக் நியூஸ்….!!!!

லண்டன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த டேவிட் காரிங்டன் ‘மாஸ்க்’ அணிவதால் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்க முடியுமா ? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு நாடுகளும் தீவிர கட்டுப்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் உலக நாடுகள் மக்கள் உயிரை காக்க ‘மாஸ்க்’ அவசியம் என்று அறிவுறுத்தி வருகிறது. இந்த நிலையில் லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டேவிட் காரிங்டன் காற்றில் பரவும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை தடுக்க மருத்துவர்கள் பயன்படுத்துகின்ற முக கவசம் பெரிய அளவில் பலன் எதுவும் தராது என்று கூறியுள்ளார்.

அதாவது நாம் அணியும் ‘மாஸ்க்’ முகத்தை ஒட்டி அழுத்தமாக இருக்காது, கண்கள் மூடப்படாது, காற்று தடுப்பானாகவும் இருக்காது என்பதால் ‘மாஸ்க்’ நோய் தொற்றுக்கு எதிராக பெரிய அளவில் பலன் அளிக்காது என்று விளக்கமளித்துள்ளார். இருப்பினும் முக கவசத்துடன் சேர்த்து சமூக இடைவெளியையும் பின்பன்றினால் ஓரளவு நோய் தொற்று பரவாமல் நம்மை தற்காத்து கொள்ள முடியும்.

Categories

Tech |