சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக சபாநாயகர் தனபாலை அதிமுக_வின் சட்டமன்ற கொறடா ராஜேந்திரன் மற்றும் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இதில் அதிமுக கட்சியின் சட்டமன்ற கொறடா பங்கேற்றுள்ளதால் அதிமுக M.L.A_க்கள் தொடர்பாக ஏதாவது பரிந்துரையாக இருக்கலாம் என தகவல் தெரியவந்துள்ளது.
இதில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அதிமுக MLA_க்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படலாம் என்றும் பேசப்படுகின்றது. அறந்தாங்கி MLA ரத்தினசபாபதி, விருத்தாச்சலம் MLA கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி MLA பிரபு ஆகியோர் TTV. தினகரன் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.