செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், இன்னைக்கு DMK ஆளுங்கட்சியாக இருக்கிறார்கள். அவங்களை தமிழ்நாட்டில் வீழ்த்த வேண்டும் என்றால் நல்ல கூட்டணியை அமைத்திருக்க வேண்டும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால், ஊடக வெளிச்சத்தில் இருப்பதால், அவர்களை நிறையபேர் தூக்கிப் பிடிப்பதால் அவர்களின் ஆட்சி பெரிய சாதனை செய்த மாதிரி முதலமைச்ச அவரே சொல்லிக் கொள்கிறார்.
ஆனால் மக்கள் வருத்தத்திலும், ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். இப்பவும் சொல்றேன், இணைந்து செயல்படும் நான் என்னைக்குமே சொன்னது இல்லையே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 2019தில், 2021இல் கூட்டணி இல்லாமல் இருந்தது. 2019இல் பாரத பிரதமர் யார் என்று சொல்ல முடியாத நிலையில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி முழுவதும் போட்டியிட்டோம்.
அப்போ எங்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கல. அதனால் இந்த முறை இந்தியாவின் பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சிறப்பாக செயல்படும். ஒரு அணிலை போல செயல்படுவோம். இந்தியா என்பது 540 தொகுதிகளுக்கு மேலே உள்ளது. அதிகபட்சம் 40 தொகுதிகள் தான் நாம் போட்டியிட முடியும். அதனால் நாங்கள் அணிலை போல செயல்பட்டு இந்தியாவின் பிரதமர் வேட்பாளரில் எங்கள் அணியை சேர்ந்தவர் தான் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.