Categories
அரசியல் மாநில செய்திகள்

உடனே தீர்மானம் போட்ட C.M… இது எடப்பாடி போல அடிமை ஆட்சி இல்ல…! AIADMKவை நோஸ்கட் செய்த DMK ..!!

இந்தி எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் சிவா, இன்றைக்கு ஒன்றிய அரசாங்கம் ஆனது, இந்திய திருநாட்டின் உடைய மதசார்பின்மையை சிதைக்கின்ற வகையில், இந்திய நாட்டினுடைய ஒருமைப்பாட்டை சிதைக்கின்ற வகையில், இன்றைக்கு ஒன்றிய அரசினுடைய உள்துறை அமைச்சரும்,  அலுவல் மொழியினுடைய பாராளுமன்ற குழு தலைவருமாக உள்ள மாண்புமிகு திரு அமித்ஷா அவர்கள் தலைமையிலான குழு குடியரசு தலைவர் அவர்கள் இடத்திலே  ஒரு அறிக்கையை தந்திருக்கிறார்.

குறிப்பாக திரு அமித்ஷா அவர்கள் கொடுக்கின்ற அந்த அறிக்கை என்ன சொல்கிறது என்றால் ?  ஒன்றிய அரசினுடைய ஐஐடி, ஐஏஎம், எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழகங்கள் அத்தனையிலுமே பயிற்று மொழியாக இதுவரைக்கும் ஆங்கிலம் இருந்தது. இனிமேல் அது இந்தி மொழியாக பரிந்துரைக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அதற்கு அடுத்தபடியாக இந்தியை பொதுமொழி ஆக்குகின்ற வகையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத கல்விகள்… கேந்திரா வித்யாலயா போன்ற மத்திய கல்வி நிலையங்கள் அனைத்திலும் என்ன சொல்கிறார்கள் என்றால் ? இந்தி மொழி பயிற்று மொழியாக இருக்கணும். கடைசியாக என்ன சொல்கிறார்கள் என்றால் ?

இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக அவர் எழுதுகின்ற தேர்வுகளில்  கட்டாய தாளில் இருக்கின்ற ஆங்கிலத்தை நீக்கிவிட்டு,  இந்தியை மட்டும் முதன்மைப்படுத்த வேண்டும் என்கின்ற கருத்துக்களை எடுத்து வைத்ததன் அடிப்படையில் தான், நம் தலைவர் உடனடியாக கடந்த காலத்தில் இருந்த…  அடிமை ஆட்சியைப் போல அல்ல,  வந்தவுடன் அதற்கான தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் என தெரிவித்தார்.

Categories

Tech |