உலகில் பல மசாஜ்கள் இருந்தாலும் பாம்பு மசாஜ் செய்வதற்கு பலரும் ஆர்வம் கட்டி வருகின்றனர்.
உலகின் பல இடங்களிலும் மசாஜ் செய்யும் முறைகள் விதவிதமாக செய்யப்படுகிறது. அந்த அளவுக்கு உடல் மசாஜ்களுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கிறது. பெரும்பாலானோர் மசாஜ் செய்து கொள்வதற்காகவே தாய்லாந்து பறந்து செல்வதும் உண்டு. மசாஜ் வகையில் ஆயில் மசாஜ், பவுடர் மசாஜ், தாய் மசாஜ் என்று பல்வேறு வகையான மசாஜ்கள் செய்யப்படுகிறது. இத்தனை மசாஜ்கள் புழக்கத்தில் இருக்கும் நிலையிலும், பாம்புகளைக் கொண்டு திகிலூட்டும் வகையில் ஒரு புதிய மசாஜ் செய்யப்பட்டு வருகிறது.
எகிப்து நகரில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் தான் பாம்புகளை கொண்டு மசாஜ் செய்து வருகின்றனர். மசாஜ் செய்ய வருபவர்களை குப்புற படுக்க வைத்து அவர்கள் முதுகின் மேலே பலவகையான பாம்புகளை விடுகின்றனர். அந்த பாம்புகள் அவர்களின் தலை முதல் கால் வரை ஊர்ந்து செல்கின்றன. இரண்டுக்கும் அதிகமான பாம்புகளை உடலின் மீது போட்டு விடுகிறார்கள். சாரைப்பாம்பு முதல் மலைப்பாம்பு வரை பல்வேறு வகையான பாம்புகள் ஊர்ந்து செல்கின்றன.
பார்ப்பதற்கு பயமாக இருந்தாலும் இந்த மசாஜ் செய்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மசாஜ் செய்த பிறகு புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடம்பு வலிகள் எல்லாம் பறந்து போய்விடுகிறது என்றும் மசாஜ் செய்தவர்கள் கூறுகின்றனர். சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யப்படுகிறது. இந்த மசாஜிற்கு இந்திய மதிப்பில் சுமார் 500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
This massage at a Cairo spa is not for the faint-hearted pic.twitter.com/YWAsHrHn1e
— Reuters (@Reuters) December 29, 2020