Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொறுமையா வாங்க…… ”பொருளோடு போங்க” ஆனந்த தாண்டவம் ஆடும் மதுபிரியர்கள் …!!

தமிழகத்தில் உள்ள மதுபிரியர்களை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் வகையில் தமிழக அரசு புது உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று நேற்றுமுன்தினம் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் குடிமகன்கள் அனைவருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கலர்களில் வண்ண அட்டை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஒரு மணி நேரத்துக்கு 70 பேர் என்ற அடிப்படையில், ஒரு நாளைக்கு 500 பேருக்கு மட்டுமே மது விற்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாகவே மது பிரியர்கள் மதுக்கடையில் குவிந்து மதுவை வாங்கி குடித்து வந்த நிலையில், தற்போது மதுபிரியர்களை  கூடுதலாக குஷிப்படுத்தும் வகையில் தமிழக அரசு தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. மாலை 5 மணி வரை செயல்பட்டுக்கொண்டு இருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் இன்று முதல் மேலும் இரண்டு மணி நேரம் அதிகரித்து இரவு 7 மணி வரை செயல்பட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு எதற்காக என்று அரசு சார்பில் முறையான விளக்கம் அளிக்க வில்லை. ஆனால் தமிழக அரசின் இந்த உத்தரவு மது பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 7, 8 ஆகிய இரண்டு நாட்கள் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் பின்னர் மூடப்பட்டபோது, மது பிரியர்கள் வேதனையில் கலங்கி நின்றனர். தமிழக அரசும்  உச்சநீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அனுமதி பெற்றது மதுபிரியர்களை மெய்மறக்க செய்தது. கடந்த இரண்டு நாட்களாக மதுக்கடைகள் செயல்பட்டு வந்த நிலையில் குடிமகன்களுக்கு மேலும் மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது  அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மது பிரியர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |