பிரபல இளம் நடிகை பிரியா பவானி சங்கர் என் அன்பை வாங்கிக்கோங்க என்று ட்விட் செய்துள்ளார்.
முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சனங்கள் ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் ‘மண்டேலா’. இளம் இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பல சர்ச்சைகளையும் சந்தித்தது. இந்நிலையில் பிரபல இளம் நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மண்டேலா திரைப்படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் மண்டேலா. மண்டேலா அஸ்வின், விது அய்யன்னா, யோகி பாபு ணா! என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம் என்று பதிவிட்டுள்ளார்.
யோசிச்சு பார்த்தா கடந்த சில பல நாட்கள்ல என் கண்ணில் கருத்தில் பதிந்த ஒரே நல்ல விஷயம் #Mandela ❤️ @madonneashwin @vidhu_ayyanna @yogibabu_offl ணா! என் அன்பை வாங்கிக்கோங்க. அவ்ளோதான். வேற ஒன்னுமில்லை. நன்றி வணக்கம்🙏🏼
— Priya BhavaniShankar (@priya_Bshankar) May 1, 2021