Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் இரக்கப்பட்டு திருநங்கைகளுக்கு லிப்ட் கொடுத்த தொழிலதிபர்… இறுதியில் நேர்ந்த அவலம்!

திருச்சியில் இரவு நேரத்தில் 2  திருநங்கைகளுக்கு லிப்ட் கொடுத்த தொழிலதிபர் நகைகள் மற்றும் பணத்தை பறி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம்  அருகேயுள்ள திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ரகுமான். இவர் கட்டிட கலை நிபுணரான  பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலை தொடர்பாக சத்தியமங்கலம்  சென்று  அங்கு பணிகளை முடித்து விட்டு நாமக்கல் அருகே காரில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் நின்று கொண்டிருந்த 2 திருநங்கைகள்  அவரது காரை வழிமறித்து  ரகுமானிடம்,  இரவு நேரம் ஆகிவிட்டது தங்களுக்கு பேருந்து  எதுவும் கிடைக்கவில்லை..  தங்களுக்கு  லிப்ட் கொடுக்கும் படி கெஞ்சி கேட்டுள்ளனர்.

அவர்கள் மீது பரிதாபபட்டு ரகுமான் காரில் ஏற்றியுள்ளார். இதையடுத்து, காரின் உள்ளே நுழைந்த அந்த திருநங்கைகள், திடீரென்று ரகுமானின் பேண்ட், சட்டைகளில் கையை விட்டு, பணம், மோதிரம் என அனைத்தையும் பறித்துவிட்டு மிரட்டியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரகுமான் அவர்களிடமிருந்து தப்பி, உடனடியாக காரை ஓட்டி சென்று, நாமக்கல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.  புகாரை அடுத்து போலீசார் உடனடியாக  அங்கு சென்று பார்த்தபோது  2 திருநங்கைகளும் அங்கே நின்றுள்ளனர். உடனடியாக அவர்களை    கைது செய்தனர்.

காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அவர்களில் ஒருவர் நாமக்கல் கொழந்தான் தெருவை சேர்ந்த அர்ச்சனா என்பதும், மற்றொருவர் சேலம் ஓமலூரைச் சேர்ந்த ரேகா என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள், 2 பேரும் இப்படி வழிப்பறி செய்வது தான்  தொழிலாக செய்துவந்துள்ளனர்  என்பது தெரியவந்துள்ளது.

 

Categories

Tech |