Categories
அரசியல்

மக்களுக்கு பேருந்து போக்குவரத்து – திடீர் அறிவிப்பு …..!!

கொரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தற்போது தளர்வுகளாக அறிவிக்கப்பட்டு, பல நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வர இருப்பதால் மக்கள் சிரமப்படக் கூடாது என்று மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக பொது போக்குவரத்தில் கூடுதல் பஸ்களை இயக்க மாநிலங்கள் முடிவு செய்துள்ளன.

அந்த வகையில், சென்னையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் ஷாப்பிங் செல்ல ஏதுவாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 24, 25, 26, 31 நவம்பர் 1,7, 8 ஆகிய தேதிகளில் 25 வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மக்கள் சிறப்பு பேருந்துகளை எளிதில் அறிய அவற்றில் முகப்பில் ”தீபாவளி ஷாப்பிங் ஸ்பெஷல்” என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும்.

Categories

Tech |