கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2.30 மணியில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் முடக்கப்படுகின்றது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டத்திலுள்ள யாரும் அந்தந்த மாவட்டத்திற்கு நுழையக்கூடாது என்ற வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு 144 தடை உத்தரவு அமலாகும் நிலையில் இருப்பதால் கோயம்பேட்டில் 2.30 மணியில் இருந்து பேருந்துக்குள் இயங்காது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. செய்யாறு, பண்ருட்டி, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி பகுதிக்கு மட்டும் தற்போது பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றது.