மோட்டார் சைக்கிளின் மீது பேருந்து மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கண்டாச்சிபுரம் பகுதியில் தயாளன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் துத்திபட்டு-பொண்ணங்குப்பம் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் இவரது மோட்டார் சைக்கிள் மீது அவ்வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது.
இதில் படுகாயமடைந்த தயாளனை அருகில் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் தயாளன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அனந்தபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.