ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 35 நபர்கள் பலியானதோடு 71 நபர்களுக்கு பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜிம்பாப்வேயின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் சிமானிமானி என்னும் கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் சியோன் கிரிஸ்டியன் தேவாலயத்தின் மக்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக பேருந்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது நெடுஞ்சாலையில் இருந்து திடீரென்று விலகிய பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.
அந்த பேருந்தில் 106 பயணிகள் இருந்துள்ளனர். விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் கூறுகிறார்கள். சமீபத்திய வருடங்களில் அந்தநாட்டில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனினும், அதற்கு தகுந்த சாலை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.