Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் பயங்கரம்…. பேருந்தில் பற்றி எரிந்த தீ…. குழந்தைகள் உட்பட 18 நபர்கள் உயிரிழப்பு…!!!

பாகிஸ்தானில் திடீரென்று பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உட்பட 18 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டின் நூரியா பாத் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற பேருந்தில் 60க்கும் அதிகமானோர் பயணித்தனர். அப்போது திடீரென்று பேருந்தில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். எனினும் அதற்குள் பேருந்து முழுக்க தீ பரவியது. எனவே, சிலர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியில் குதித்து தப்பிவிட்டனர்.

எனினும் குழந்தைகள் உட்பட 18 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் மாட்டி தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 28-க்கும் அதிகமானோருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் நெருப்பை அணைத்துவிட்டனர்.

பேருந்தின் குளிர்சாதன பகுதியில் தீ பற்றியதாக தெரிய வந்திருக்கிறது. அந்நாட்டில் சமீபத்தில் பலத்த மழை பெய்ததில் அதிகமான மாவட்டங்கள் வெள்ளத்தில் பாதிப்படைந்தது. எனவே, அந்த பேருந்தில் இருந்த மக்கள் கராச்சியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். வெள்ள பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து அங்கிருந்து மீண்டும் தங்கள் பகுதிக்கு பேருந்தில் சென்ற போது தான் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Categories

Tech |