Categories
தேசிய செய்திகள்

பேருந்துகள் இயக்கம் : “உங்கள் விருப்பம்” முடிவு பண்ணிக்கோங்க….. மத்திய அரசு அனுமதி….!!

போக்குவரத்து இயக்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருவதால், பேருந்து சேவை உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கில் பல தளர்வுகள் தொடர்ந்து ஏற்படுத்தப் பட்டு வரும் சூழலில், போக்குவரத்திலும் தயவு தட்சனை காட்டுமாறு மத்திய, மாநில அரசுகளிடம் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து பல கோரிக்கைகளை முன்னிறுத்தி வந்தனர். அந்த வகையில்,

பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட போக்குவரத்துகள் இயக்கத்தை சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ஆராய்ச்சி முதுநிலை கல்வி பயில்பவர்கள், செய்முறை பயிற்சி மேற்கொள்பவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வந்து செல்லலாம் என்றும்,  நீச்சல் குளம், பொழுதுபோக்கு பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. 

Categories

Tech |