Categories
உலக செய்திகள்

“பற்றி எரியும் காட்டுத் தீ”… மீட்பு பணியில் இறங்கும் விமானப்படை…!!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக 15 லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலம் பாதிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியா வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஏற்பட்ட 3வது பெரிய நெருப்பாக, கடும் வெப்பம் மற்றும் தொடர்ந்து மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட காட்டுத் தீ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெருப்பின் காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானஙகள் போராடி வரும் நிலையில் 40க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வரை 12 லட்சம் ஏக்கர் நிலம் நெருப்பால் பாழாகிப் போனது. மேலும் நேற்று ஒரே நாளில் நாப்பா, சோனோமா போன்ற பகுதிகளில் உள்ள 3.40 லட்சம் ஏக்கர் நிலம் நெருப்பிற்கு இரையானது. அப்பகுதியில் வசித்து வந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்களது வளர்ப்பு பிராணிகளுடன் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்த ஆபத்தான நிலையை கையாள, தீயணைப்பு படை வீரர்களுடன் சேர்ந்து பணியாற்ற விமானப்படை வீரர்களும் ராணுவப்படை வீரர்களும் களமிறங்கியுள்ளனர்.

Categories

Tech |