எருமையை திருடியதாக கொடுக்கப்பட்ட புகாரின் முடிவை காவல்துறையினர் எருமையிடமே ஒப்படைத்தனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் இருக்கும் கநௌச் மாவட்டத்தை சேர்ந்த வீரேந்திர என்பவரும் தர்மேந்திரா என்பவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டிக் காவல் நிலையத்திற்கு சென்றனர். இருவரும் தங்கள் எருமையை மற்றொருவர் திருடி விட்டதாக புகார் கொடுத்தனர். இதனால் காவல் துறையினர் எருமையின் உண்மையான உரிமையாளர் யார் என்பது தெரியாமல் யோசித்து வந்தனர்.
இறுதியாக உரிமையாளரை கண்டுபிடிக்கும் பொறுப்பை எருமையிடமே காவல்துறையினர் ஒப்படைத்தனர். தர்மேந்திரா மற்றும் வீரேந்திர ஆகிய இருவரையும் எதிர் எதிராக நிற்க வைத்துவிட்டு எருமையை கூப்பிட சொன்னார்கள். எருமை தர்மேந்திராவிடம் சென்றதால் உண்மையான உரிமையாளர் அவர்தான் என்று அவரிடமே காவல்துறையினர் எருமையை ஒப்படைத்தனர்.