Categories
அரசியல் மாநில செய்திகள்

நிறைகளும் குறைகளும் இணைந்த பட்ஜெட் – விஜயகாந்த் அதிருப்தி …!!

மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று விஜயகாந்த் அதிருப்தி அடைந்துள்ளார்.

மத்திய அரசின் 2020 – 2021 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் தெரிவித்தார். இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் , பல்வேறு விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்தவகையில் இதுகுறித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் கூறுகையில் , மத்திய பட்ஜெட் நிறைகளும் , குறைகளும் இணைந்த அம்சங்களை கொண்டதாக பார்க்கமுடிகிறது. வருமான வரி குறைப்பு , விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் என பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. நதிகள் இணைப்புக்கான எந்த அறிவிப்பும் மத்திய பட்ஜெட்டில் இல்லை. தனிநபர் வருமானத்தை உயர்த்த கூடிய பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது என்று பட்ஜெட் குறித்து தெரிவித்துள்ளார்.

Categories

Tech |