Categories
தேசிய செய்திகள்

10 ரூபாய்க்கு இலவசமாக பேசலாம்… வாடிக்கையாளர்களுக்கு BSNL அதிரடி சலுகை!

பி.எஸ்.என்.எல் நிறுவனம் ப்ரீபெய்ட் சிம் கார்டு ஏப்ரல் 20 வரை ரீசார்ஜ் செய்யாமலேயே செயல்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தற்போது இந்த வைரஸில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது. இதனால் கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவில் பாதிக்கப்பட்டு வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. அதே சமயத்தில் நாளுக்குநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனிடையே பல்வேறு சேவை நிறுவனங்கள் மக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது.

இந்த நிலையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்ட் சிம் கார்டு ஏப்ரல் 20 வரை ரீசார்ஜ் செய்யாமலேயே செயல்படும் என்றும், 10 ரூபாய்க்கு பேசுவதற்கு இலவசமாக ரீசார்ஜ் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இதன் மூலம்  ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலத்தில், ஏழை தொழிலாளர்களுக்கு பேசுவதற்கு ஏதுவாக இருக்கும்  என்றும் கூறினார்.

Categories

Tech |