பிரிட்டன் அரசு தடுப்பூசி போடாதவர்களுடன் பழகுவதற்கு சில அறிவுரைகளை விடுத்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே பிரிட்டனில் கொரோனாவின் தாக்கம் குறைந்து இருப்பதால் ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு தளர்வு மே 17 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஆறு பேர் கொண்ட நபர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் சந்தித்துக் கொள்ளலாம் என்றும் அவர்கள் ஒருவருக்கொருவர் கை குலுக்குதல், கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களை செய்து கொள்வது அவர்கள் விருப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடுப்பூசி போடாதவர்களுடன் கட்டிப்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் தொற்று அபாயம் ஏற்படும் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி போட்டவர்களுடன் இந்த செயல்களில் ஈடுபடுவது பாதுகாப்பானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.