செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், ஒருவரை அமைச்சரவையில் சேர்க்கலாம், நீக்கலாம் என்ற அதிகாரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் அந்தந்த மாநில முதலமைச்சருக்கு வழங்கி இருக்கிறது. உதயநிதி கட்சியின் இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அந்த அடிப்படையில் திமுக கட்சிக்கும், மாண்புமிகு தமிழக முதல்வருக்கு இருக்கின்ற அதிகாரம்.
பொது மக்களாகிய நாம் நம்முடைய கருத்துக்களை, விமர்சனங்களை முன் வைக்கலாமே தவிர, அவருடைய அதிகாரத்தில் நாம் யாரும் தலையிட முடியாது. உதயநிதியை அண்ணன் என சொன்னது சர்ச்சை இல்லை. அது தமிழருடைய பண்பாடு. என்னுடைய மூத்தவராக இருக்கின்ற ஜம்புலிங்கம் என்னை அண்ணன் என்று தான் கூப்பிடுகின்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் என்னை விட மூத்தவர். என்னை அண்ணன் என்று தான் கூப்பிடுகிறார். நான் இதர பொது இடங்களில் இளைஞரணி செயலாளரை என்ன ? இளைஞரணி செயலாளர் என்று கூப்பிடுவேன். என்ன கதாநாயகன் என கூப்பிடுவேன். பல கட்டங்களில் என்ன ? உதய் சார் எப்படி இருக்கீங்க ? என கூப்பிடுவேன். பல இடங்களில் அண்ணன் என்று பேசியுள்ளேன். இது தமிழர்களின் மேடை நாகரீகம். அதன் அடிப்படையில் சொல்லப்படுகின்ற வார்த்தைகள் என தெரிவித்தார்.