Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தகராறில் ஈடுபட்ட அண்ணன்-தம்பி… டிரைவரை கடித்ததால் பரபரப்பு… போலிஸ் நடவடிக்கை…!!

அரசு பேருந்து ஓட்டுனரிடம் தகராறில் ஈடுபட்டு விரல்களை கடித்த அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் தங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராமேஸ்வரம் அரசு பேருந்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தங்கம் ராமநாதபுரத்தில் இருந்து பேருந்தை இயக்க முயன்றபோது பேருந்தில் இருந்த 2 இளைஞர்கள் உச்சிபுளி விமான நிலையத்தில் நிறுத்துமாறு கூறியுள்ளனர். அதற்கு அந்த நிறுத்தத்தில் பேருந்து நிற்காது என தங்கம் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும் தங்கத்தை தகாத வார்த்தையில் பேசி அவர் விரல்ககளை கடித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தங்கம் அளித்த புகாரின் அடிப்படையில் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து தகராறில் ஈடுபட்ட சேர்வைக்காரன் ஊருணி பகுதியை சேர்ந்த மாரி மற்றும் அவரது தம்பி மணிகண்டனை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |