பலத்த காற்று வீசியதால் மரம் மின்கம்பத்தின் மீது விழுந்த விழுந்ததால் மின்தடை ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மஞ்சள்பரப்பு பகுதியில் பலத்த காற்று வீசியதால் தனியார் தோட்டத்திற்கு சொந்தமான இலவமரம் வேரோடு சாய்ந்து மின் கம்பியின் மீது விழுந்துள்ளது. இதனை அடுத்து மின்கம்பிகள் முறிந்து, வயர்கள் அறுந்து அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்சார துறை ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் மரத்தை அகற்றி மின்கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்துள்ளனர். அதன்பிறகு அப்பகுதியில் சீரான மின்சாரம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப் பட்டுள்ளது.