பிரிட்டனில் 56 வயதிலிருந்து 59 வயதிற்குட்பட்ட நபர்களின் வீட்டிற்கு NHS கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகி விட்டது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவை எதிர்க்கும் விதமாக தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் 65 வயதில் இருந்து 69 வயதிற்குட்பட்ட நபர்களில் 10ல் 8 என்ற விகிதத்தில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இதற்கு அடுத்தகட்டமாக 56 வயதிலிருந்து 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று பிரான்ஸ் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதனால் 56 வயதிலிருந்து 59 வயதிற்குட்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு அழைப்பு விடுக்கும் விதமாக கடந்த சனிக்கிழமை அந்த நபர்களின் வீட்டிற்கு மட்டும் NHS -National Health Service கடிதத்தை அனுப்பியுள்ளது.