பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உதவுவோம் என்று தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி இருப்பதால், அங்கு எந்த மாதிரியான அரசு அமைக்கப்படும் என்ற அறிவிப்பை விரைவில் அறிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்திருந்தனர். எனினும் அந்த ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்கப்போவதில்லை. ஷரியத் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும் என்று உறுதியாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தலிபான்கள் ஆட்சியை, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஆதரித்திருக்கிறது. இந்நிலையில், பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன், ஆப்கானிஸ்தான் நாட்டின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர அரசியல் மற்றும் ராஜாங்கம் அடிப்படையில் உதவ பிரிட்டன் தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.
மேலும், தேவைப்படும் பட்சத்தில் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைப்பதற்கும் தலிபான்களுக்கு உதவுவோம் என்று தெரிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்கள் அங்கிருந்து தப்பி வந்ததால், பதற்ற நிலை நிலவியது. தற்போது அந்த நிலை மாறி இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை, ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து 1615 நபர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் பிரிட்டனை சேர்ந்த மக்கள் 399 நபர்கள், தூதரக பணியாளர்கள் 320 நபர்கள், மீதமுள்ள 402 நபர்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று பிரதமர் கூறியிருக்கிறார்.