Categories
உலக செய்திகள்

“பிரதமர் பதவிக்கு இவர் தான் பொருந்துவார்!”.. போரிஸ் ஜான்சனை ஓரம் கட்டிய மக்கள்..!!

பிரிட்டன் மக்கள், போரிஸ் ஜான்சனனை விட பிரதமர் பதவியில் ரிஷி சுனக் தான் சிறந்து விளங்குவார் என்று கருதுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரிட்டனின் சேன்ஸலரான ரிஷி சுனக், கொரோனா விதிமுறைகளை அகற்ற, அதிக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அனுப்பியிருந்த கடிதம், ஊடகங்களுக்கு தெரியவந்ததாக புகார் எழுந்திருக்கிறது. இதனால், பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அலுவலர்கள் பலர் இருக்கும் போது, ரிஷி சுனக்கை சுகாதார செயலாளராக பதவி இறக்கம் செய்வதாக மிரட்டல் விடுத்துள்ளார். எனினும், மாறாக பிரிட்டன் மக்கள் பிரதமர் பதவியில் போரிஸ் ஜான்சன் அதிக காலத்திற்கு நிலைக்க மாட்டார் என்று கருதுகிறார்கள். எனவே அந்தப் பதவிக்கு ரிஷி சுனக் வர வேண்டும் என்றும் நினைக்கிறார்கள்.

அதிலும், அடுத்த ஒரு வருடத்திற்குள், ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனுக்கு பதிலாக பிரதமராக வேண்டும் என்று கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த 47% பேர் விரும்புவது ஆய்வில்  தெரியவந்துள்ளது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ரிஷி சுனக், போரிஸ் ஜான்சனை காட்டிலும் நம்பகத்தன்மை, அறிவு மற்றும் திறமை போன்றவற்றில் சிறப்பாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது.

ஒட்டுமொத்தமாக 42% பிரிட்டன் மக்கள் போரிஸ் ஜான்சனை காட்டிலும் ரிஷி சுனக் தான் சிறந்த பிரதமராக விளங்குவார் என்று நினைக்கிறார்கள். போரிஸ் ஜான்சனுக்கு 24% மக்கள் தான் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |