Categories
உலக செய்திகள்

2022-ல் இதுதான் கதி..! பிரித்தானியர்களுக்கு முக்கிய அறிவிப்பு… ஊடகங்களின் பரபரப்பு தகவல்..!!

பிரித்தானிய ஊடகங்கள் ஐரோப்பா பயணிக்கும் பிரித்தானியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய ஊடகங்கள் ஐரோப்பா பயணிக்கும் பிரித்தானியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் விடுமுறைக்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செல்லும் போது அதிக பிரெக்சிட் கட்டணத்தால் பாதிக்கப்படுவார்கள் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் ஐரோப்பாவிற்குள் நுழையும் பிரித்தானிய நாட்டவர்கள் ஒவ்வொரு முறையும் அதிகமான கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பயணம் செய்யும் பிரித்தானியர்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் 7 யூரோக்கள் மதிப்புடைய ETIAS ஆவணத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். அதில் 18 வயதிற்கு உட்பட்ட பயணிகள் ETIAS பயண அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்திருக்கும் பட்சத்தில் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

Categories

Tech |