Categories
உலக செய்திகள்

மிகப்பெரிய குழந்தையை பிரசவித்த பெண்…. எடை எவ்வளவு தெரியுமா….? வைரல் புகைப்படங்கள்….!!

பிரித்தானியாவில் 6.7 கிலோ எடையில் மிகப்பெரிய குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது.

பிரித்தானியாவில் Cherral Mitchell (31) என்ற பெண் 6.7 கிலோ எடையில் ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை உண்டாக்கியுள்ளது. இந்த குழந்தை பிரித்தானியாவில் கடந்த 8 ஆண்டுகளில் பிறந்த 3 ஆவது மிகப்பெரிய குழந்தை என கூறப்படுகிறது. மேலும், இந்த குழந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு நகரத்தில் உள்ள John Radcliffe என்ற மருத்துவமனையில் பிறந்ததுள்ளது.

அதுமட்டுமின்றி, Mitchell-க்கு பிரசவம் பார்க்க 2 மருத்துவர்கள் தேவைப்பட்டனர். தற்போது, பிறந்த குழந்தைக்கு Alpha என பெயரிடப்பட்டுள்ளது. அதோடு ‘Baby Hippo’ மற்றும் ‘Butter Bean’ ஆகிய 2 செல்லப்பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், குழந்தையின் தாய் ‘pumpkin baby’ என்று செல்லமாக அழைத்து வருகிறார். தற்போது இந்த குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இக்குழந்தை 38 வார கர்ப்பத்தில் பிறக்கும்போது கிட்டத்தட்ட 6.7 கிலோ எடை இருந்தது. இதற்கு முன்னதாக பிரித்தானியாவில் 1992 ஆம் ஆண்டு பிறந்த Guy Carr என்ற குழந்தை 7.3 கிலோ எடையில் முதல் இடத்திலும், அதனை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு George King என்ற குழந்தை 7.0 கிலோ எடையில் 2 ஆவது மிகப்பெரிய குழந்தையாகவும் பிறந்தன.

Categories

Tech |