பிரித்தானியாவில் வெப்ப பம்புகளை மாற்றியமைக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு வீட்டுக்கும் தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்கும் திட்டத்தை அரசு அமல்படுத்தியது. இந்த மானியத்திற்கு ஒவ்வொரு குடும்பத்தினரும், வீட்டின் எரிவாயு கொதிக்கலன்களை(Gas boilers) மாற்றி குறைந்த கார்பன் உமிழ்வை கொண்ட வெப்ப பம்புகளை (heat pumps) பொருத்தி விண்ணப்பிக்க முடியும்.
மேலும் வருகிற 2035 ஆம் ஆண்டுக்குள் புதிய தொழில்நுட்பம் கொண்ட வெப்ப அமைப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இந்த மானியங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கார்பன் இலக்கை அடையமுடியும் என பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக 450 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் கொதிகலன் மேம்படுத்தல் திட்டம் (£450 million boiler upgrade scheme) அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டம் குறித்து பிரித்தானிய அமைச்சர்கள் கூறியதாவது, “இதன் மூலம் எதிர்வரும் ஆண்டுகளில் கார்பன் உமிழ்வு குறையும். மேலும் புதைபடிவ எரிபொருள்கள் (fossil fuel) மீதான சார்பு மற்றும் எரிவாயுவின் உலகளாவிய விலை உயர்வும் குறையும். இந்த காலகட்டத்தில் பிரித்தானியா முழுவதும் 2,40,000 வேலை வாய்ப்புகள் கிடைக்கும்” என்றும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மக்கள், ஏற்கனவே பொருத்தியுள்ள புதைபடிவ எரிபொருள் கொதிகலன்களை அகற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்று பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.