பிரிட்டன் மகாராணியாரின் பிறந்தநாளில் அரச குடும்பமே அவருடன் இருந்த போது இளவரசர் ஹாரி நண்பர்களுடன் மதுபான விடுதியில் இருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் குடியேறிய நிலையில் சமீபத்தில் தன் பாட்டி, பிரிட்டன் மகாராணியை சந்தித்திருக்கிறார். அதன்பிறகு அவர் தெரிவித்ததாவது, மகாராணியார் பாதுகாப்புடன் உள்ளாரா என்று தெரிந்து கொள்வதற்காக பிரிட்டன் வந்தேன் என்று கூறினார்.
அவரின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மகாராணியாரின் அருகில் அவரின் மகன் மற்றும் வருங்கால அரசரான இளவரசர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் இருந்துள்ளனர். அப்போது, ஹாரி மகாராணியாரின் பாதுகாப்பு பற்றி பேசியது தான் பிரச்சனை. இவ்வாறு மகாராணியாரின் பாதுகாப்பில் அக்கறை உடையவராக தன்னைக் காட்டிக்கொண்ட ஹாரி, நேற்று முன்தினம் மகாராணியாரின் 96-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
அரசு குடும்பத்தினர் மொத்தமாக மகாராணியாருடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடிய போது, இளவரசர் ஹாரி தன் நண்பர்களுடன் மதுபான விடுதியில் குடித்துக்கொண்டிருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனை பிரிட்டன் மக்கள் விமர்சித்து வருகிறார்கள்.