பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் பிறந்தநாளான ஜூன் 10ம் தேதியன்று இளவரசர் ஹரி-மேகன் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் ஜூன் 10 ஆம் தேதி அன்று வருகிறது. அதே தேதியில் இளவரசர் ஹரியின் இரண்டாம் குழந்தை பிறக்கவிருப்பதால், குழந்தைக்கு இளவரசர் பிலிப்பின் பெயரை சூட்டலாம் என்று கூறப்படுகிறது. பெண் குழந்தையாக இருந்தால், மகாராணியாரின் பெயரை சூட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரண்மனையின் நெருங்கிய வட்டாரங்கள், இளவரசர் பிலிப்பின் பிறந்தநாளில் இளவரசர் ஹரிக்கு குழந்தை பிறக்கவுள்ள விஷயம் சிறப்பானது என்று கூறியுள்ளார்கள். மேலும் இளவரசர் ஹரி தன் குழந்தைக்கு பெயர் சூட்டுவது குறித்து நெருங்கிய வட்டாரங்கள் உடன் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைக்கு இளவரசி டயானாவின் பெயர் சூட்டப்படும் என்றும் கூறப்பட்டுவருகிறது.