பிரிட்டன் இளவரசர் ஹாரி மகாராணியாரை அவமரியாதை செய்யப்போவதாக அரச குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளார்கள்.
இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த நேர்காணலில் ஹாரியின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து அரச குடும்பத்தில் ஒருவர் விமர்சித்ததாக தெரிவித்திருந்தனர். அது யார்? என்ற தகவலை இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரச குடும்பத்தினரை பற்றிய பல சர்ச்சைக்குரிய தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹாரி அப்புத்தகத்தை அடுத்த வருடத்தில் வெளியிடவுள்ளார். அதாவது பிரிட்டன் மகாராணியார் இரண்டாம் எலிசபெத், மகாராணியாக பொறுப்பேற்ற 70-வது வருட விழா கொண்டாடப்படுகிறது.
“பிளாட்டினம் ஜூபிலி” கொண்டாடப்படப்போகும் சமயத்தில் ஹரி இப்புத்தகத்தை வெளியிடுகிறார். எனவே மகாராணியாரின் மிகப்பெரிய சிறப்பு விழாவின் மகிழ்ச்சியை அது மொத்தமாக பாதித்துவிடும் என்று அரச குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளார்கள். மேலும் தற்போது வரை பிரிட்டனில் 70 வருட காலம் ஒருவர் ஆட்சியில் இருந்தது, இதற்கு முன்பாக நடந்திருக்கவில்லை.
முதன்முதலாக, இரண்டாம் எலிசபெத் மகாராணி தான் இந்த பெருமையை பெற்றிருக்கிறார். இப்படிப்பட்ட மிகப்பெரிய சிறப்பை அங்கீகரிக்க கூடிய சமயத்தில், அதனை மொத்தமாக கெடுக்கும் வகையில் சர்ச்சைக்குரிய புத்தகம் வெளியிடுவது தான் தற்போது பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.