பிரிட்டன் நாட்டின் பிரதமர் தேர்தல் போட்டியில் ரிஷி சுனக்கை காட்டிலும் லிஸ் டிரஸ் முன்னிலை வகிப்பதாக ஒரு ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது.
பிரிட்டன் நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் கடந்த 7-ஆம் தேதி அன்று ராஜினாமா செய்தார். அதன் பிறகு புதிதாக பிரதமரை தேர்ந்தெடுக்கும் பணி நடக்கிறது. அந்த போட்டியின் கடைசி நிலையில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் இருக்கிறார்கள். வரும் ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதியிலிருந்து செப்டம்பர் மாத தொடக்கம் வரை வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
அதில் இவர்கள் இருவரில் யார் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது தெரியவரும். இந்நிலையில் இது குறித்து யூகவ் என்ற அமைப்பு சார்பாக ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ரிஷி சுனக்கை காட்டிலும் 19 புள்ளிகள் அதிகமாக லிஸ் டிரஸ் பெற்று வெற்றி அடைவார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதன்படி, ரிஷி சுனக்கிற்கு 31% உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். லிஸ் ட்ரஸ்ற்கு 49% உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மீதமுள்ள 15% உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள்? என்பது தெரியவில்லை. மேலும் 6% உறுப்பினர்கள் வாக்களிக்க போவதில்லை என்று கூறி இருக்கிறார்கள். இந்த தகவலின் அடிப்படையில், நாட்டின் அடுத்த பிரதமராகவும் வாய்ப்பு ரிஷியை காட்டிலும் லிஸிற்குத்தான் அதிகம் இருப்பதாக தெரியவந்திருக்கிறது.