Categories
உலக செய்திகள்

இன்று கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா….? பிரிட்டன் பிரதமரின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்கள்….!!

பிரிட்டனில் கேபினெட் கூட்டமானது, பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் நடக்கவிருக்கும் நிலையில், புதிய கொரோனா விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பிரிட்டன் பிரதமர் கொரோனா விதிமுறை குறித்து முடிவெடுக்க ஒரு கேபினட் கூட்டத்தை நடத்த இருக்கிறார். ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு மருத்துவமனைகளில் சிக்கல் ஏற்படாது என்று கருதப்படுகிறது. இதனிடையே பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தெரிவித்திருப்பதாவது, ஒமிக்ரான் தொற்று முன்பு பரவிய வைரஸ்களை விட வீரியம் குறைவாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

ஆய்வுகளின்படி, ஒமிக்ரான் தொற்று முன்பு பரவிய வைரஸ்களை விட 70% குறைந்த தீவிரத்தை கொண்டிருக்கிறது. மூன்றாவது தவணை தடுப்பூசி கொரோனா பாதிப்புக்குள்ளாகும் நபர்களை அதிக பாதிப்பிலிருந்து காக்கிறது என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. எனவே, பிரதமர் புதிய விதிமுறைகளை இக்கூட்டத்திற்கு பிறகு அறிவிக்க மாட்டார் என்று தான் அதிகம் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Categories

Tech |