Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் ஏழ்மை குடும்பங்களுக்கான நிதிஉதவி… எப்போது இரண்டாம் தவணை?.. வெளியான தகவல்…!!!

பிரிட்டன் நாட்டில் குறைந்த வருமானம் பெறும் 8 மில்லியன் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியின் இரண்டாம் தவணை எப்போது அளிக்கப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரிட்டனில் குறைந்த வருமானம் பெறும் எட்டு மில்லியன் குடும்பங்களுக்கு 650 பவுண்டு நிதி உதவி வழங்க முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, கடந்த வியாழக்கிழமையலிருந்து, முதல் தவணை 326 பவுண்டுகள் தகுந்த குடும்பங்களுக்கு வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது.

எனினும் அதிகமான குடும்பங்கள் தற்போது வரை முதல் தவணை நிதியுதவி கிடைக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றது. Child Tax Credits, அல்லது Tax Credits-ல் இருக்கும் மக்களுக்கு வேலை மற்றும் ஓய்வூதியத்திற்கு பதில் HMRC மூலம் நிதிஉதவி கிடைக்கும். இதனால், இந்த நிதி உதவி தாமதமாகத்தான் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் முதல் தவணை நிதி உதவி கிடைக்க வேண்டும் எனில் கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியிலிருந்து மே மாதம் 25ஆம் தேதி வரை யுனிவர்சல் கிரெடிட் பேமெண்ட்களுக்கு உரிமை வாங்கியிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் இரண்டாம் தவணையானது  வரும் அக்டோபர் மாதத்தில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இம்மாத இறுதிக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் முதல் தவணை நிதி உதவியை வழங்க அரசு தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |